மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் : விசாரணைகள் ஆரம்பம்
Sri Lanka
By Beulah
இலங்கையில் ஒகஸ்ட் 26ஆம் திகதி பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (13) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் கனக ஹேரத், சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காலதாமதம்
இதன் காரணமாக தரவுகள் தொலைந்து விட்டதாக தெரிவித்த பிரதியமைச்சர், தரவுகளை சேகரிக்க சுமார் இரண்டு மாதங்களாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்