தமிழ் பிரதிநிதிகளின் சித்து விளையாட்டுகள் - நெருக்கடி நிலையிலும் அரசியல் ஆதாய முயற்சி

Jaffna Douglas Devananda Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Angajan Ramanathan
By Vanan Jun 19, 2022 02:43 AM GMT
Report

தமிழர் பிரதிநிதிகளின் அரசியல் ஆதாயங்களை ஈட்டும் தந்திரோபாயங்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்நிய வருவாயை ஈட்டும் செயற்திட்டங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கிவரும் நிலையில், தமிழர் தாயக பிரதிநிதிகள் அரசியல் ஆதாயங்களை ஈட்டும் தந்திரோபாயங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை வரவேற்பதில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் முண்டியடித்துக்கொண்டமை அம்பலமாகியிருந்தது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மீளவும் திறந்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான திட்டத்திற்கும் அரசாங்கம் இணங்கியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தமிழ் பிரதிநிதிகளின் சித்து விளையாட்டுகள் - நெருக்கடி நிலையிலும் அரசியல் ஆதாய முயற்சி | Sl Economic Crisis Tamil Politicans Game

இந்த இரண்டு முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முன்னறிவித்தபடி யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.

அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில், கொழும்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அமைச்சருடன் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டு அவருடன் தனது தொடருந்து பயணச்சீட்டையும் பதிவு செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பிலும் காரசார கருத்துக்கள்


அத்துடன் தன்னுடைய அழைப்பின் பேரில் தான் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாகவும் அங்கஜன் தனது உத்தியோகப்பூர்வ முகநூலில் குறிப்பிட்டு, தன்னை பின்தொடர்பவர்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், அங்கஜன் இராமநாதன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் வருவதை அறிந்துக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காங்கேசன்துறைக்கு செல்வதற்காக வந்த அமைச்சரை யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் தொடருந்து தரித்து நின்ற சில நொடிகளில் பரபரப்பாக சந்தித்து வரவேற்று ஊடகங்களில் இடம்பிடித்துக்கொண்டார்.

தமிழ் பிரதிநிதிகளின் சித்து விளையாட்டுகள் - நெருக்கடி நிலையிலும் அரசியல் ஆதாய முயற்சி | Sl Economic Crisis Tamil Politicans Game

இதன் பின்னணியில் சமூக வலைத்தளங்களில் வடக்கின் இரு பிரதிநிதிகளும் மேற்கொண்ட ஏட்டிக்கு போட்டியான பதிவுகளுக்கு சுவாரஷ்ய கருத்துக்களும் பதியப்பட்டிருந்தன. பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பிலும் காரசார கருத்துக்கள் பதியப்பட்டிருந்தவை பகிரங்கமானதே.

வடக்கு கிழக்கு பாகுபாடின்றி இலங்கை மக்கள் அனைவரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமக்கு தீர்வு தருமாறு வலியுறுத்திவரும் நிலையில், இவ்வாறான அரசியல் சித்து விளையாட்டக்களும் நிகழத்தான் செய்கின்றன.  


GalleryGallery
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020