றீச்சா போபியா மேனியா! போமலின் புரட்டுகள்! பெஸ்ரிவல் குழப்பங்கள்!
றீச்சா பண்ணையில் விளைவிக்கப்படும் பழங்கள் அழுகாமல் ஆக இருப்பதற்காக போர்மலின் என்ற இரசாயனம் தெளிக்கப்படுவதாக தனது இரசாயன வதந்தி வாயால் வடக்கின் சுயேச்சை கிளாடியேற்றர் எம்.பி தனது நாடாளுமன்ற சிறப்புரிமை உரையில் அடித்துவிட்டார்.
அதுவும் றீச்சாவில் ஒரு உணவுத்திருவிழா நடப்பதற்கு முதல் நாளில்; நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய Parliamentary Privilege and Immunity எனப்படும் உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமையில் சொன்னார்.
அவ்வாறான போமலின் பழங்கள் தெற்கை நோக்கி வருவதாகவும் சிங்களவர்களை பீதியூட்டி சமூக சேதசதிக் கோட்பாடுகளை (Destruction Conspiracy Theory ) எடுத்து விட மறுநாள் வடக்கின் சுற்றுலாத்துறை மற்றும் அதன் பொருளாதார சுயசார்பை அடிக்கும் நோக்குடன் றீச்சா நிகழ்வில் சில களமிறக்கிகள் குழப்பங்களை செய்தமை ஒரு ரைம்லைன் நகர்வாகவே தெரிகிறது.
இந்த ரைம்லைன் குழப்பங்களை எய்தவர்களின் உள்நோக்கம் வடக்கின் பொருளாதார சுயசார்பை அடிப்பது மாகாணசபைத்தேர்தலில் எங்கே றீச்சா BK களமிறங்கிவிடுவாரோ என்ற கிலிசார்ந்த இலக்குகள் இதன்பின்னர் தான் றீச்சா மற்றும் BK போபியா மேனியாக்கள் சமூக வலைத்தள கூச்சல்களாக வந்த நிலையில் தனிப்பட்ட அரசியல் பகை வைத்துள்ள தரப்புகள் இதனை முதலீடாக்க துடிக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |