அதிபர் தேர்தல் நடைபெறும் காலம் அறிவிப்பு: தேசிய வேட்பாளராக ரணில்
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Election
By Dhilak
அதிபர் தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதமும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமும் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று(09) பிற்பகல் கட்சியின் தலைவர் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் செயலகத்தில் கூடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான தேசிய வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்நிலையில், அதிபர் தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதமும் நாடாளுமன்றத் தேர்தல் 2025 ஜனவரியில் நடத்தப்படும் எனவும் அதிபர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |