அதிபர் ரணிலின் 'காசா குழந்தைகள் நிதி' முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி
காசா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக “Children of Gaza Fund“ இனை காசாவில் நிறுவுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் ரணில் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்
மேலும், இதனை ஊக்குவிப்பதற்காக அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
இதன்படி, தங்களின் நன்கொடைகளை 11.04.2024 இற்கு முன்னர், இலங்கை வங்கியின் (7010), தப்ரோபன் (747) கிளைகளில் 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு "அதிபரின் செயலாளர்" என்ற பெயரில் வைப்பிலிடுமாறும், அதற்கான பற்றுச்சீட்டை 077- 9730396 எனும் இலக்கத்திற்கு வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அனுப்பி வைக்குமாறும் அதிபர் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- 2024.02.27 -
— Department of Government Information (@infodprtsl) February 27, 2024
The Cabinet approved the proposal by President Wickremesinghe to create a "Children of Gaza Fund" in aid of Gaza violence victims. All Ministries & Government Institutions directed to forego Ifthar celebrations & contribute to this fund.#Srilanka #lka #Lanka #DGI pic.twitter.com/mc5Q0OrcTQ
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |