ட்ரம்புக்கு முக்கிய கடிதம்! முன்னாள் அமைச்சர் அதிரடி
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடிதத்தில், இலங்கையின் ஏற்றுமதித் துறையை இந்த நடவடிக்கைகள் மோசமாகப் பாதித்துள்ளதாகக் கூறி, வரிகளில் இருந்து நிவாரணம் வழங்குமாறு அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதியாளர்கள் மீதான சுமையைக் குறைக்க, வரி வீதங்களை குறைப்பது குறித்து அமெரிக்க நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தக உறவுகள்
அமெரிக்கா தனது பரந்த வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கைப் பொருட்களுக்கு வரிகளை விதித்ததை அடுத்து, முன்னாள் அமைச்சரின் இந்த கோரிக்கை வந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நியாயமான வர்த்தக உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள அழகப்பெரும, அமெரிக்காவுடனான இலங்கையின் நீண்டகால பொருளாதார உறவுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஒரு வளரும் நாடு என்றும், வர்த்தக சலுகைகள் அதன் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதித் தொழில்களை ஆதரிக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |