யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆக்கிரமிப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு பின்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகள், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின், இது தொடர்பான பேச்சுக்களை தான் சட்டமா அதிபருடன் முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
காணிகள் தொடரபில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச செயலாளர்களுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரம் மற்றும் இயலுமை குறித்து இந்த பேச்சுக்களின் போது அவதானம் செலுத்தப்படுமெனவும் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
இதையடுத்து, குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |