ரணிலை ஆதரிக்க முடியாது : நாமல் அதிரடி!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து திட்டங்களையும் யோசனைகளையும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்காது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும், அவர் மேற்கொள்ளும் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நெருக்கடிளுக்கு தீர்வு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு நாம் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தோம்.
எமது தீர்மானம் சரி என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் இலங்கையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
எனினும், இதன் காரணமாக அவர் கூறும் அனைத்தையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாத சில திட்டங்களையும் ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார்.
ரணிலை எதிர்க்கும் மொட்டு கட்சி
அதிக காலம் தனக்கு எதிராக செயல்பட்ட ஒரே அரசியல் கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுன என ரணில் விக்ரமசிங்கவே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவே உண்மை. மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட்டனர்.
எனினும், நாம் அவர்களை போல் செயல்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து யோசனைகளுக்கும் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது.
தேசிய பொருளாதாரம்
மக்களால் செலுத்த முடியுமான வகையில் வரிகள் குறைக்கப்பட வேண்டும். வரிகளை குறைப்பதன் மூலம் இலங்கையின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பது எமது நம்பிக்கை.
தேசிய பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமென கூறுகிறார்கள்.
எனினும், இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மீனவர்கள், பயிர்ச் செய்கையாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும். தேசிய பொருளதாரத்தை உள்நாட்டு வளங்களின் மூலம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்