2.5 மில்லியன் டொலரைச் சுருட்டிய ஹெக்கர்..! பின்னணியில் நடந்துள்ள சம்பவம்

Ministry of Finance Sri Lanka Financial crisis Crime Branch Criminal Investigation Department Crime Dollars
By Thulsi Apr 25, 2026 05:46 AM GMT
Report

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், நம்பகமான தரப்பாகத் தோன்றி போலியான தகவல்களை முன்வைத்த ஒரு தரப்பினரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, இழந்த பணத்தை மீண்டும் மீட்பது என்பது தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் சவால்கள் நிறைந்த ஒரு காரியம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

[X7DX1QD ]

மின்னஞ்சல் கணக்கை ஊடுருவி

இது குறித்து அந்த குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுணுபொல கருத்து தெரிவிக்கையில்: "ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இது ஒரு 'பிசினஸ் ஈமெயில் காம்ப்ளிமைஸ்' (Business Email Compromise - BEC) அல்லது நிறுவன மின்னஞ்சல் கணக்கை ஊடுருவி அல்லது அதன் மற்றுமொரு தரப்பாகத் தோன்றி நடத்தப்பட்ட ஒரு மோசடி என அடையாளம் காண முடிகிறது.

2.5 மில்லியன் டொலரைச் சுருட்டிய ஹெக்கர்..! பின்னணியில் நடந்துள்ள சம்பவம் | Sl Investigates After Hackers Steal 2 Million Usd

நம்பகமான தரப்பாக நடித்து, போலியான தகவல்களை வழங்கி இந்தப் பணத்தைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

மூன்றாம் தரப்பு ஒன்று நீண்டகாலமாக இந்த கொடுக்கல் வாங்கல்களைக் கண்காணித்து, சரியான நேரத்தில் வேறொரு கணக்கு விபரத்தை அனுப்பி பணத்தைப் பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய சந்தேகநபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய சந்தேகநபர்

பணச்சலவை

இதற்காக அசல் நிறுவனத்தின் இணையதளத்தையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ ஒத்த போலியான முகவரிகளை அவர்கள் நுணுக்கமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

2.5 மில்லியன் டொலரைச் சுருட்டிய ஹெக்கர்..! பின்னணியில் நடந்துள்ள சம்பவம் | Sl Investigates After Hackers Steal 2 Million Usd

இந்தப் பணம் எந்த நாட்டில், எந்தக் கணக்குகளின் ஊடாகப் பரிமாறப்பட்டுள்ளது? அது வெளிநாடாக இருந்தால் இன்டர்போல் (Interpol) உதவியைப் பெற முடியும்.

சில நேரங்களில் இந்தப் பணம் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) போன்ற டிஜிட்டல் சொத்துக்களாக மாற்றப்பட்டு பணச்சலவை செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

எதுவாக இருந்தாலும், சர்வதேச காவல்துறையினர் ஊடாக அந்தச் சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியிருக்கும். இது அனைத்தும் பெரிய தொழில்நுட்ப சவால்களுடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்." என்றார்.

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025