வரலாறு தெரியாமல் சர்ச்சையில் சிக்கிய பிமல் : சுற்றி வளைத்த தமிழ் தலைமைகள்
அண்மைய அரசியல் களத்தில் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்த கருத்துக்கள் பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக வெடித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாரிய தோல்வியை எதிர்நோக்கிய தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியை தன் வசப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், குறித்த வெற்றி தேசிய மக்கள் சக்திக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி இருந்த சூழலில் தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த கருத்து தமிழ் அரசியல் களத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறான பிண்ணனியில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர், தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பிலும், அண்மைய அரசியல் செய்திகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய சமகாலம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
