நீண்ட வார இறுதி விடுமுறை : நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட தொடருந்து சேவைகள்
Sri Lanka
Northern Province of Sri Lanka
Railways
By Eunice Ruth
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நாளை (8) முதல் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு மற்றும் மலையக மார்க்கங்களில் இந்த தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் என்.எம்.ஜே. இதிபொல தெரிவித்துள்ளார்.
மலையகம்
இதன்படி, இன்றிரவு தபால் தொடருந்து சேவைக்கு முன்னதாக பதுளை நோக்கி தொடருந்தொன்று புறப்படவுள்ளதுடன், நாளை காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி தொடருந்தொன்று சேவையில் ஈடுபடவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி காலை 7.45 மற்றும் மாலை 5.20 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இரண்டு தொடருந்துகள் பயணிக்கவுள்ளன.
வடக்கு
இதனை தவிர நாளைய தினம் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட தொடருந்தொன்று சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி