நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் திடீர் மாற்றம்
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
SL Protest
By Vanan
இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர்பு விபரங்கள் மற்றும் தற்போதைய முகவரிகள் இடம்பெற்றிருந்தன.
நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் மாற்றங்கள்
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட பின்னணியில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
