இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் : கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

United Nations Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Sri Lanka
By Sathangani Sep 28, 2023 04:12 AM GMT
Report

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம்  வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்

பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள்

”ஆயுதப்  போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் : கஜேந்திரகுமார் வலியுறுத்தல் | Sl Must Be Brought Before Icc Gajendrakumar

குருந்தூர் மலையிலுள்ள தமிழர்களின் பழமையான வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று சிங்கள மக்கள் வசிக்காத தமிழர் தாயகப் பகுதிகளான நாயாறு, தையிட்டி, நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமனலங்குளம், கன்னியா வெந்நீரூற்று போன்ற இடங்களிலும் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் தலைநகரில் இரகசியமாக கட்டப்படும் விகாரையால் பதற்றம்!(படங்கள்)

தமிழர் தலைநகரில் இரகசியமாக கட்டப்படும் விகாரையால் பதற்றம்!(படங்கள்)


இவ்வாறு சட்டவிரோதமாக ஆலயங்கள் கட்டப்படும் சில இடங்களில் அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மூன்று இலட்சம் கால்நடைகள் பயன்பெறக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் வசித்துவந்த தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் : கஜேந்திரகுமார் வலியுறுத்தல் | Sl Must Be Brought Before Icc Gajendrakumar

அந்த பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களால் சட்டவிரோதமான முறையில் சோளப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுகிறது.

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சட்டத்தினை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு இலங்கை உறுதியளித்திருந்தது.

எமது கட்சியின் பொதுச் செயலாளர் செல்வரசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார்.

2012ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதிலும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணம் உள்ளது.”  எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்