மட்டக்களப்பில் அமைதியான முறையில் வாக்களிப்பு

Batticaloa
By Thulsi Nov 14, 2024 06:53 AM GMT
Report

இலங்கையின் 10 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 23 அரசியல் கட்சிகளும், 33 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 56 வேட்புமேனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு

அதில் 22 அரசியல் கட்சிகளினதும், 27 சுயேட்சைக் குழுக்களினதுமாக மொத்தம் 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இம்முறை 392 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பில் அமைதியான முறையில் வாக்களிப்பு | Sl Parliament Election 2024 Batticaloa District

ஒரு அரசியல் கட்சியினதும், 6 சுயேச்சை குழுக்களினதுமாக மொத்தம் 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தபால் மூலமாக வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 14,222 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் 14003 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாக, மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 449,686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் - காவல்துறை அசமந்தம்

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் - காவல்துறை அசமந்தம்

வாக்களிப்பு நிலையங்கள்

அதில் கல்குடா தொகுதியிலிருந்து 134,104 பேரும், மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து 210,293 பேரும், பட்டிருப்புத் தொகுதியிலிருந்து 105,289 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளளர். இம்மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் அமைதியான முறையில் வாக்களிப்பு | Sl Parliament Election 2024 Batticaloa District

அதில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலைங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்புக்கள் பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றதும், வாக்கெண்ணும் நிலைமாகவுள்ள, மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு காவல்துறையின் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

அங்கு 46 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 37 சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களும், 9 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களுமாக அமைந்துள்ளன.

விதிமுறை மீறல் சம்பவங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாரிய வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை.

மட்டக்களப்பில் அமைதியான முறையில் வாக்களிப்பு | Sl Parliament Election 2024 Batticaloa District

இந்நிலையில் முப்படையினரும் மாவட்டத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகஸ்த்தர்களும், 1900 பொலிசார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினரும், 300 இற்கும் மேற்பட்ட வாகனங்களும், கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

இதேவேளை தேர்தல் கண்காணிப்புக்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு, கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் மேலும் தெரிவித்தார்.  

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024