பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் கைது : புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றின் உத்தரவு
பாலியல் அத்துமீறல் செய்ததாக பெண்ணொருவர் புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு 17.11.2026 ற்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண்ணொருவரினால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் தவிசாளர் தனக்கு பாலியல் அத்துமீறல் செய்ததாக அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரை விசாரணைக்காக அழைத்த காவல்துறையினர் 16.10.2026 அன்று தவிசாளரை கைது செய்தனர்
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில் 16.10.2026 அன்றைய தினமே தவிசாளரை இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 345 ஆம் பிரிவின் கீழ் வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலமாக பாலியல் ரீதியான மன உளைச்சலையோ அல்லது துன்புறுத்தலையோ ஏற்ப்படுத்தல் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரி கெங்காதரன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்

இதன்போது தவிசாளர் தரப்பு சட்டத்தரணி அவர்களது வாதங்களை கேட்ட பதில் நீதிபதி தவிசாளரை இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் செல்ல அனுமதித்ததோடு வழக்கினை எதிர்வரும் 17.11.2026 ற்கு தவணையிட்டார் ச
ம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |