9 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீட்பு..!
மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த மீனவர் ஒருவரின் களவாடப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த உபகரணங்கள் கற்பிட்டி பகுதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
பின்னணி
மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வாடி, பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
குறித்த மீன்பிடி வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 இயந்திரயங்கள் உள்ளிட்ட உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த வாடியின் உரிமையாளரால் மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது அந்த உபகரணங்களும், சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
