தந்தையின் அரசியல் தந்திரங்களை பின்பற்றும் மகன்! மரிக்கார் பகிரங்கம்
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள சிறந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு தேர்தல்களில் தனித்து வெற்றி பெற முடியாதெனவும், இதனை அனைத்து அரசியல்வாதிகளும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே எஸ்.எம். மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார்.
தனி போட்டி
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை.
1989 ஆம் ஆண்டில் ரணசிங்க பிரேமதாச அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஏ.எச்.எப் அஷ்ரப் எனும் நபரின் ஆதரவு தேவைப்பட்டது.
எனினும், அஷ்ரப் அவரது ஆதரவை வழங்க முன்னதாக நிபந்தனையொன்றை விதித்திருந்தார். இதற்கமைய, கட்சியின் மூவரை நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமதாச முன்மொழிய கூடாதென அஷ்ரப் தெரிவித்தார்.
அஷ்ரப்பின் நிபந்தனை
இந்த நிபந்தனையை ஏற்று அஷ்ரப்பின் ஆதரவை ரணசிங்க பிரேமதாச பெற்றுக் கொண்டார்.
எனினும், தேர்தலின் பின்னர் குறிப்பிட்ட இருவரில் ஒருவருக்கு இராஜங்க அமைச்சர் பதவியையையும் மற்றுமொருவருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவியையும் பிரேமதாச வழங்கினார்.
இவ்வாறாக அரசியல் செய்ய அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
ஊழல்வாதிகள்
இதற்காக ஊழல்வாதிகளை கட்சியுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென நான் கூற வரவில்லை.
அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எமது கட்சியின் நிலை மோசமடையும்.
எனினும், கட்சியுடன் இணைந்து பயணிக்க கூடிய சிறந்த நபர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |