ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : கடும் எச்சரிக்கை விடுத்த டலஸ்
இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு இலங்கையில் அனைத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் நடைபெறவிருந்த பல தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதிபர் தேர்தல்
இதற்கமைய, இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் உள்ளிட்ட ஏனைய தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பமென டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
அரசியலமைப்பு
இலங்கையின் அரசியலமைப்பு ஒருபோதும் மீறப்படக்கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பை மீறும் வகையில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட யார் செயல்பட்டாலும், குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |