தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி : வெளியாகியுள்ள அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வெளியிடுதல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், காவல்துறையினருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |