10 வருடங்களில் 25 வீதத்தால் குறைந்த இலங்கையின் பிறப்பு வீதம்
Sri Lanka
By Sathangani
கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் இந்த விடயம் தெரியவருகிறது.
இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 பதிவாகியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு

குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி