வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத சிறிலங்கா தர நிர்ணய நிறுவனம் : வெளியாகியுள்ள உண்மைகள்...!
சிறிலங்கா தர நிர்ணய நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தனது வருடாந்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
பேராசிரியர். ரஞ்சித் பண்டார தலைமையில் கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு கூடிய போதே, இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய, இந்த நிறுவனம் நாடாளுமன்றத்தை புறக்கணித்தமை குறித்து கோப் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நிதிச் சுற்றறிக்கைகள்
மேலும், நிதிச் சுற்றறிக்கைகளுக்கு மாறாக ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் : உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக நாமல் தெரிவிப்பு!
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சிறிலங்கா தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இதன் போது தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கொடுப்பனவுகளை அனுமதியின்றி வழங்குவது சட்டவிரோதமானது எனவும், அத்தகைய முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியுள்ளது.

விசாரணை அறிக்கை
இது குறித்து ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 14 மணி நேரம் முன்