இலங்கையில் இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிபுணர் வைத்தியர் விந்தியா குமாரப்பெல்லி (Vindhya Kumarappelli) தெரிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு (Colombo) விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் பயன்பாடு
இந்தநிலையில், சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருதி புற்றுநோய்
அத்தோடு, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 30% பேர் லுகேமியாவால் (Leukemia) பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25% பேர் மத்திய நரம்பு மண்டல புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் குருதி புற்றுநோய்களுக்கான நிபுணர் வைத்தியர் புத்திக சோமவர்தன (Buddhika Somawardhana) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |