புத்தாண்டு காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்! வெளியானது அறிவிப்பு
சிங்கள-தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இருப்பு
நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து, குதங்களில் போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம்
காசோலை மூலம் விநியோகஸ்தர்கள் எரிபொருளை வாங்குவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான பெற்றோலிய சேமிப்பை வைத்துக் கொள்ள அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |