அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வு : அரச தரப்பின் அறிவிப்பு
அனோஜனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ரீதியான முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சல்லி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அனோஜன் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் தூதுவராலயத்தின் ஊடாகவும் மற்றும் அரசாங்கத்தின் உதவியுடனும் அனோஜனை நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய சட்டரீதியிலான அணுகல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சட்ட நடவடிக்கைகள்
அத்துடன் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை மக்களுடன் ஒருங்கிணைந்த குழுக்களை அமைத்து அதனூடே முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதன் மூலமாக பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும் இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மக்களுடன் இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் அதனை இன்னமும் துரிதப்படுத்த உத்தேசித்திருக்கின்றோம்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |