கொம்பனித்தெரு முருகன் ஆலய நகைகள் கொள்ளை! தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு
கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆலயத்தின் தலைமை அர்ச்சகருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.
சதீஸ்வரன் குருக்கள் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அர்ச்சகர் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு கொட்டாஞ்சேனையில் உள்ள புதுச் செட்டித்தெரு பகுதியல் சொத்து ஒன்றை வாங்கியுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள்
மேலதிக விசாரணை
இந்நிலையில், காணாமல் போன கோயிலின் மதிப்புமிக்க நகைகளைக் கண்டறியவும், பெறப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்து குறித்து ஆய்வு செய்யவும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தலைமறைவாக உள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |