மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய முயற்சி
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 'பிங்க் டே' பிரச்சாரத்துடன் (Pink Day Campaign) நாட்டில் மார்பக புற்றுநோய் (Breast Cancer) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சிறிலங்கா கிரிக்கெட் (SLC) நிதி நன்கொடை வழங்கத் தொடங்கியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு முறையும் ஒரு துடுப்பாட்ட வீரர் ஒரு ஆறு ஒட்டம் , ஒரு நான்கு ஓட்டம் (பவுண்டரி) அல்லது ஒரு விக்கெட்டை எடுக்கும்போது, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அதற்கான நிதியை நன்கொடையாக வழங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய்
இதன்படி, ஒரு ஆறு ஓட்டத்திற்கு10,000 ரூபா, ஒரு நான்கு ஓட்டத்திற்கு (பவுண்டரி முறையில்) 4,000 ரூபா மற்றும் ஒரு விக்கெட்டிற்கு 6,000 ரூபா என நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில், 'மார்பக புற்றுநோய்' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த முயற்சி இன்று (14) முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரம், லங்கா பிரீமியர் லீக் 2024 இன் இறுதிப் போட்டியில் வீசப்படும் கடைசிப் பந்து வரை தொடரும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


