ரணிலின் வெற்றி: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாடுகள் தீவிரம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “எமது கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Sripala De Silva) மற்றும் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா (Duminda Silva) உட்பட கட்சியின் அதிகாரிகள் மட்டுமன்றி சு.கவை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 14 உறுப்பினர்களில் 08 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பலமான ஏற்பாட்டு
அத்தோடு, அகில இலங்கை நிறைவேற்று சபையிலுள்ள 90% உடன்பாட்டுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது .
எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான ஏற்பாட்டு வலையமைப்பு தற்போதே தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |