வைரலாகும் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை அவமதிக்கும் வார்த்தை
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச (Dr Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் கொழும்பு நீதிமன்ற வளாகத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் கேலிக்குள்ளான ஒரு சொல் பாவனைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வார்த்தையின் அர்த்தம் "250 மில்லியன் டொலர் விஜேதாச விஷயம்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு( Maithripala Sirisena) எதிரான பல வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜேதாச ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமித்ததாகவும், எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராகவும் அவர் முன்மொழியப்பட்டதாக விளம்பரம் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புரிமை
ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது செயல் தலைவராக இருந்த பதவிக்காலம் சில நாட்களில் முடிவடைந்தது.
இதற்கிடையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிட்டு சட்டத்தில் இருந்து தப்பிக்கும் நபராக அறியப்படுகிறார்.
250 மில்லியன் டொலர்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீயில் எரிந்து நாசமான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து நட்டஈட்டைத் தடுப்பதற்காக 250 மில்லியன் டொலர்களை இலஞ்சமாகப் பெற்ற ஒருவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வங்கி மற்றும் காசோலை எண்கள் கூட தன்னிடம் இருப்பதாக இலஞ்சம் பெற்ற நபர் மேலும் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை என்ற போர்வையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |