எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை - முடிவை அறிவித்தது மைத்திரி தரப்பு
எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
5 பேர் அதிபர் பதவிக்கு போட்டி
புதிய அதிபர் பதவிக்காக நாடாளுமன்றத்தில் போட்டிநிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் இடையில் இந்தப் போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் 5 பேரும் அதிபராக தெரிவு செய்யப்படுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
