யாழில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் - மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் அளப்பரிய வரப்பிரசாதம்
தமிழ் இனத்தை கட்டியெழுப்ப மிக முக்கியமான விடயமாக கல்வி காணப்படுவதாகவும் அதன் காரணமாகவே தாயக பகுதியில் உயர்கல்விக்கான தனியார் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதாகவும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் நொதன் யுனி தனியார் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான இந்திரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழினுடைய அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி வள வாய்ப்புகளை ஒவ்வொருவரும் தான் பிறந்த தாய் மண்ணிலேயே பெறுவது என்பது அவர்களுக்கு அளப்பரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
ஆனால் நாங்கள் வள வாய்ப்புகளைத் தேடி உலகத்தினுடைய மூலை முடுக்குகளுக்கு எல்லாம் ஓட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த சமகாலத்திற்கு தேவையான தொழில்நுட்ப, அதே நேரத்திலே உலகம் எதிர்பார்க்கின்ற தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகுந்தவர்களாக மாணவர் சமூகத்தை உருவாக்க வேண்டிய தேவை எங்களிடத்திலே இருக்கின்றது.
இப்படி இருக்க, வடக்கிலே - யாழ்ப்பாணத்திலே உலகத் தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம் உருவெடுத்திருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன? மாணவர்களுக்கு எவ்வாறான வரப்பிரசாதங்கள் கிடைக்கப்போகின்றன? மாணவர்களுக்கான கற்கைநெறிக்கான கட்டண அணுகுமுறை எப்படியானது? விளக்குகிறார் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் இந்திரன் பத்மநாதன்.
அகளங்கம் நிகழ்ச்சி
இளைஞர் யுவதிகளுக்கோர் அரிய வாய்ப்பு
