இலங்கையில் மற்றொரு அலை விரைவில் வரும்!! அரச அதிபருக்கு பறந்த அவசர கடிதம்
corona
sri lanka
SLMA
By Shalini
இலங்கையில் COVID-19 இன் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) 4 அம்ச யோசனையை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சமீபத்திய ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றொரு அலை விரைவில் இருப்பதை நிரூபிக்கின்றதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமை COVID-19 மற்றொரு அலை விரைவில் வரவிருக்கின்றதை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸின் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக இலங்கை மருத்துவ சங்கம் 4 முக்கிய ஆலோசனைகளை முன்வைத்துள்ளன.