சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்!
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அப்துல் வாஹித், தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாக, பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |