ரணிலை மொட்டு கட்சி ஆதரிக்காது! எதிர்க்கட்சி பகிரங்கம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவினரின் ஆதரவுடன் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) திட்டமிட்டிருந்தாலும், குறித்த முயற்சி தோல்வியிலேயே முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா (Sujith Sanjaya Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) ஊடகமான்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர், இன்றும் ராஜபக்சக்களுக்கு மாத்திரம் ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொட்டு கட்சியினர்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மொட்டு கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் மேற்கொள்ளும் தீர்மானத்தையே கட்சியின் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள்.
அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். இதனை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன், அதிபரின் பதிவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதிபரின் சேவைக்காலம்
எனினும், இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கவின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கான மக்கள் ஆணை அவருக்கு கிடைக்காது.
தொடர்ந்தும் சிறிலங்காவின் அதிபராக செயல்பட ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருந்தாலும், அவரால் அதனை செய்ய முடியாது என்பதே உண்மை.
சிறிலங்கா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்க, அவருக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. இந்த ஆதரவு அவருக்கு கிடைக்குமென்று உறுதியாக கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |