அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள மொட்டுக் கட்சி உறுப்பினர்! வெளியான காரணம்
ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் உள்ள ஜெயபிம பகுயில் அமைந்துள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பிரிவின் அதிகாரிகளால் நேற்று (11) இந்த வீட்டில் சோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் பெயரில் பதிவு
அங்கு கைப்பற்றப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதிவு இலக்கமானது, அந்த உறுப்பினரின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்குரியது என காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உறுப்பினரின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட உறுப்பினர் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |