மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி
சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலுக்கும் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள்
அத்தோடு, சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த வருடம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலா அல்லது அதிபர் தேர்தலா என்பதைத் தீர்மானிக்க முடியாது எனவும், அதனை அரசாங்கம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட கூட்டம்
அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கூட்டம் நாளை(27) முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதில் கட்சி பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடலின் முடிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |