மகிந்த இட்ட கட்டளை - எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கை
SLPP
Mahinda Rajapaksa
Sagara Kariyawasam
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)தொடர்பாக சமுக வலைத்தளங்களில் சேறு பூசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏற்கனவே பல நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கட்சியின் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு சேறு பூசும் நடவடிக்கை
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொது மக்கள் மத்தியில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்கு எதிராக சேறு பூசுவதில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஈடுபட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி