இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: வெளியான காரணம்!
பூபூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களின் சிறு அசைவுகளே நிலநடுக்கங்களுக்கு காரணம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (Universtity Of Peradeniya) புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன (Atula Senaratne) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் (Sri Lanka) அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “பூமிக்குள் இலங்கையின் மையப்பகுதி, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மில்லிமீட்டர்கள் என்ற விகிதத்தில் மிக மெதுவாக உயர்ந்து வருகிறது.
கனிம வளங்கள்
குறிப்பாக பூமியின் மேற்பரப்பில் நிலத்தடி செயல்பாடு அதிகமாக இருக்கும் பல இடங்கள் உள்ளன, அந்த இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள் கனிம வளங்கள் நிறைந்தவை எனவே, இவ்வாறான நிலப்பரப்புகளில் ஏற்படும் உயர்வால் இந்த சிறிய அதிர்வுகள் ஏற்படுகின்றன." என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனுராதபுரத்திற்கும் (Anuradhapura) கந்தளாய் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (16) 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
