தமிழர் பகுதியில் அரச ஊழியர்களால் தாக்கப்பட்ட பெண் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
புதிய இணைப்பு
திருகோணமலை (Trincomalee) நிலாவெளி பகுதியில் உள்ள அரச அலுவலகத்தில் வைத்து பெண் ஒருவர் அதிகாரிகளால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நிலாவெளி பகுதியில் நீர் விநியோகம் முறையாக இடம்பெறவில்லை என பெண்ணொருவர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில் அதற்கு உரியப் பதில் வழங்காமல் அதிகாரிகள் பெண்ணை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு அதிகாரிகளையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவுக்கு பணித்துள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை (Trincomalee) நிலாவெளி பகுதியில் உள்ள அரச அலுவலகத்தில் வைத்து பெண் ஒருவர் அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் விடுதி ஒன்றின் உரிமையாளர் என தெரியவந்துள்ள நிலையில் விடுதியில் நீர் துண்டிக்கப்பட்டிருந்ததால் நிலாவெளியில் அமைந்துள்ள நீர் வடிகாலமைப்பு அலுவலகத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
மோசமான வார்த்தை
இதன்போது, அங்கிருந்த அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க மறுத்ததோடு மோசமான வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதுடன் குறித்த பெண் மீது அவர்கள் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பெண் காவல்துறையினருக்கு இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |