சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது
சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார (Namal Kumara) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அவர் இன்று (01) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் (Malcolm Ranjith) நற்பெயருக்கு (CID) களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு தொடர்பாக நாமல் குமார கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
இதேவேளை முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு (Manusha Nanayakkara) எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் போது, மனுஷ நாணயக்கார கையூட்டல் பெற்றிருக்கலாம் என்பதால் அவரது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |