சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்வது எங்கள் நோக்கமல்ல : பந்துல குணவர்தன தெரிவிப்பு
சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை இலங்கையிலும் முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் போலியான தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக ஏற்படும் இன, மத மோதல்களையும் வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதே சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய இலக்கு என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் : ரணில் விக்ரமசிங்க
போலியான செய்திகள்
போலியான தகவல்களை அல்லது செய்திகளை பகிர்வது மற்றும் ஏனைய குற்றச்செயல்களை தடுப்பதற்காக மாத்திரமே இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தியடைந்த சீனா போன்ற நாடுகளில் எந்த வித சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தப்படுவதில்லை, அவ்வாறானதொரு தடையை இலங்கையில் விதிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், இன, மத ரீதியான மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டக் கூடிய, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
