பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் புதிய தடை!
16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாக பிரித்தானியா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தடை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஸ்னாப்சட் (Snapchat), டிக்டொக் (TikTok), யூடியூப் (YouTube), இன்ஸ்டகிராம் (Instagram), முகநூல் (Facebook) மற்றும் எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள ரீதியான பிரச்சினைகள்
கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்கு இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கவுள்ள நிலையில் இது உலகளவில் இதுவரை விதிக்கப்பட்ட மிகக் கடுமையான இணையக் கட்டுப்பாடுகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
We are banning social media access for under 16s.
— Keir Starmer (@Keir_Starmer) June 15, 2026
These days kids must find their feet in a world where technology intrudes into every area of their life.
I just can’t let that go on anymore. So we’re giving children their childhoods back. pic.twitter.com/jn7iQrcwk8
சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உள ரீதியான பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமூக ஊடக ஒழுங்குமுறைகளில் பரந்த அளவிலான மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸ்டார்மர் மேலும் தெரிவித்தார்.
ஒரு முழுமையான தடையே சரியான தேர்வு என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய அவர், இது எளிதானதாக இருக்காது என்றாலும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |