டிரம்ப்பின் அறிவிப்பு - மசகு எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது.
இந்நிலையில், ஈரானுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் சரிந்துள்ளன.
அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 3.55% சரிந்து ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
உடன்படிக்கை
டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 4.10% சரிந்து 80.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து 83.02 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
இருநாடுகளுக்கும் இடையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டால் மசகு எண்ணெய் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |