முழு சூரிய கிரகணம்: கனேடியர்களால் முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை
முழு சூரிய கிரகண நிகழ்வு நிகழ்ந்துள்ள நிலையில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்கள்.
நேற்றைய தினம்( 8) இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் சில நாடுகளில் தென்பட்டது.
இந்த அரிய சூரிய கிரகணத்தை மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள நாடுகளில் காண முடிந்தது.
முழு சூரிய கிரகணம்
முழு சூரிய கிரகணம் காரணமாக, இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை சந்திரன் சூரியனை 4 நிமிடங்கள் 28 விநாடிகளுக்கு மறைத்தது.
இதன்போது, கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்கள்.
2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் குங்டாங் (Guangdong)மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.
கின்னஸ் சாதனை
இந்நிலையில், நேற்றைய தினம்(8) கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா நகரில், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் 309 பேர் சூரியனைப்போல மஞ்சள் நிறத்தில் உடையணிந்து ஒன்று திரண்டுள்ளார்கள்.
அதன்மூலம் அந்த சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது.
The moment Niagara Falls beat the world record for most people dressed as the Sun #SolarEclipse2024 #NiagaraFalls pic.twitter.com/2fUTIpUtWG
— Joy Joshi (@JoyJJos) April 8, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |