துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய்: கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்
முதலாம் இயந்திரமயமாக்கப்பட்ட படையணியில் கடமையாற்றி வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியுடன் முகாமிலிருந்து தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று(03) பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே துப்பாக்கியை எடுத்துக்கொண்டு முகாமை விட்டு ஓடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சிப்பாய் இராணுவ முகாமின் 03வது வாயிலுக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் டி56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்களுடன் முகாமை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரை துரத்திச் சென்ற அதிகாரிகள், அரவியர் நகர் பகுதியில் வைத்து சந்தேகநபரான இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்