இதுவரை உயிரிழந்துள்ள மொத்த இராணுவ வீரர்கள் - ரஷ்யா - உக்ரைன் போர் - ஐ.நா சபையின் அறிக்கை வெளியீடு!
Russo-Ukrainian War
Armed Forces
Ukraine
Russian Federation
Death
By Pakirathan
ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கு இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.
குறித்த போரினால் இதுவரை உயிரிழந்துள்ள இரு நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஐ.நா சபையின் அறிக்கை
ரஷ்யா - உக்ரைன் போரினால் இதுவரை இரு நாடுகளையும் சேர்ந்த 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் விளைவாக இதுவரை உக்ரைன் நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் 6,884 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10,947 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்