கடும் உணவு நெருக்கடி - பேராசிரியர்கள் சமர்ப்பித்த முன்மொழிவு
பேராசிரியர்கள் சமர்ப்பித்த முன்மொழிவு
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக மூன்று பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட முன்மொழிவை விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கையில் விவசாயம் எதிர்நோக்கும் அண்மைக்கால நிலைமையை கருத்தில் கொண்டு, குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலம் என மூன்று வகைகளின் கீழ் இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம், ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து பேராசிரியர்கள் குழுவொன்று அண்மையில் விவசாய, வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விவசாய அமைச்சில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தது.
உணவு நெருக்கடி
எதிர்காலத்தில் இலங்கை சந்திக்கும் உணவு நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். முன்மொழிவுகளில் உள்ள அனைத்து உண்மைகளையும் கருத்திற் கொண்டு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் திட்டமானது கடந்த மகா பருவத்திலும், நடப்பு யாலப் பருவத்திலும் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பேராசிரியர் புத்தி மரம்பே, பேராசிரியர் ஜனேந்திர டி கொஸ்டா, பேராசிரியர் தேவிகா டி கொஸ்டா, பேராசிரியர் அருண குமார, பேராசிரியர் சிவானந்தவேல், சமன் தர்மகீர்த்தி, பேராசிரியர் மெத்திகா விதானகே, பேராசிரியர் நலிகா ரணதுங்க, பேராசிரியர் வர்ஷி தண்டெனிய, பேராசிரியர் நிலந்த லியனகே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
