கடந்த 30 வருட மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியால் தீர்வு - கலகொட அத்தே ஞானசார தேரர்
இலங்கை அரசதலைவர் மற்றும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பரிந்துரைக் குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Kalagoda Atte Gnanasara Thera) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞானசாரர் தேரர் மற்றும் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பரிந்துரைக்குழுவினர் வாழைச்சேனைக்கு வருகை தந்திருந்தனர்.
இன்று கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த 30 வருட காலமாக ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
எனவே பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிலை இருக்கிறது.
யுத்த காலங்களில் வெளியேறியவர்கள் தமிழ்,சிங்களம்,முஸ்லிம் என்ற வேறுபாடு பார்க்காமல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலனிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்குழு இன்று வாழைச்சேனைக்கு வந்தவுடன் தீர்வு கிடைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது காணிப்பிரச்சினை, வீதி, பாலம், காணி எல்லை தொடர்பான விடயங்கள் .சிங்கள குடியேற்றங்கள் பௌத்த மத பாடசாலை அமைத்தல்.என பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இன்று ஞானசாரதேரரின் வருகையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




