தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு - அரசாங்கம் அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
By Pavi
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய சம்பளச் சபையொன்றை நியமிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
சம்பள பிரச்சனைக்கு தீர்வு காண அது தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை சட்டமா அதிபர் இன்று (16.11.2026) அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தை அதிகரிக்க உத்தரவு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்