பொன்னம்பலம் அருணாசலத்தின் நூற்றாண்டுவிழாவில் ரணில் வெளியிட்ட உறுதிமொழி
சுதந்திர தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை என்ற கருத்தாக்கத்தை அடையாளமாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட யுத்தம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவேந்தல்
சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வில் இன்று (09) காலை கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அதிபர் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பொன்னம்பலம் அருணாசலம் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் உருவாக்கிய இலங்கைக் கருத்தை முன்னெடுத்துச் செல்வதே அவர்களுக்குக் காட்டப்படக்கூடிய உயரிய மரியாதை என அதிபர் தெரிவித்தார்.
அருணாச்சலத்திற்கு செலுத்தும் உயரிய அஞ்சலி
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியில் கூட்டுப் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, இது சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு செலுத்தும் உயரிய அஞ்சலி என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சேர் அருணாச்சலத்தின் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |