சோமாலியா பயங்கரவாத தாக்குதல் : 167 இராணுவ வீரர்கள் பலி
சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இவர்களை ஒடுக்க சோமாலியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதம் நிகழ்ந்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
இந்நிலையில், சோமாலியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 167 இராணுவ வீரர்கள் பலியாகி உள்ள சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சோமாலியா அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அண்டை நாடுகளான எத்தியோப்பியா மற்றும் உகாண்டா இராணுவமும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.
அந்த வகையில் சோமாலியாவின் மேற்குப் பகுதிகளில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.